டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை பகுதிகளில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் .
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு,
மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் கமுருதீன் தலைமையில்,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் முன்னிலையில்,
திருச்சி மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகநாதர் ஏ. சிவக்குமார் மற்றும்
திருச்சி மாநகர் மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் மலைக்கோட்டை சங்கர் ஆகியோரின் ஏற்பாட்டில்,
நேற்று 13.12.2024 காலை 5.30 மணி அளவில், திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அன்னதானம் வழங்கப்பட்டது,
இதனை தொடர்ந்து
மலைக்கோட்டை பகுதி, 14வது வட்ட செயலாளர் சுடலைமுத்து அவர்களின் ஏற்பாட்டில் சறுக்கு பாறை சின்ன கடை வீதியிலும்,
14A வது வட்டச் செயலாளர் பாரதி அவர்களின் ஏற்பாட்டில் பாபு ரோட்டிலும்,
21வது வட்டச் செயலாளர் செல்வராஜ் மற்றும் பகுதி இணைச் செயலாளர் வெங்கடேசலு அவர்களின் ஏற்பாட்டில் ராமகிருஷ்ணா பாலம் அருகே மதுரை ரோட்டிலும்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடிகளை, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் அவர்கள் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட துணைச் செயலாளர் தன்சிங் உட்பட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.