திருச்சியில்
செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.
அரியலுார், ஜெயங்கொண்டம், தச்சன் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிகரன் (வயது43). இவர் கடந்த டிச.10 ந் தேதி திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்குள்ள கழிவறைக்கு சென்றபோது அங்கிருந்து 2 மர்ம நபர்கள் ஜோதிகரனை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ 1500 பணம் மற்றும் அவரது செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், மேட்டூர், மேச்சேரியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது33). இவர் கடந்த டிச.10 ந் தேதி திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேலம் செல்வதற்காக சேலம் பஸ் ஏறினார். அப்போது இவரது பின்னே நின்றிருந்த மர்ம நபர் வேல்முருகன் பாக்கெட்டில் இருந்த செல்போனை திருட முயன்றபோது கையும், களவுமாக மாட்டிக்கொண்டார். இதையடுத்து அவரை கண்டோண்மென்ட் போலீசில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன் திருடியது கீழ சிந்தாமணி, ஓடத்துறை சாலை விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது29) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணிகண்டனைகைது செய்தனர்.