ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி அமமுக அலுவலகத்தில் அவைத்தலைவர் தலைமையில் புகழஞ்சலி .
மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர்
டிடிவி.தினகரன் அவர்கள் ஆணைக்கிணங்க,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில்,
திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்,
மாவட்ட அவை தலைவர் எம்.எஸ்.
ராமலிங்கம் அவர்கள் தலைமையில்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் அம்மாவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி
புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது,
இந்த நிகழ்வில்
மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள்,
ஒன்றிய, பகுதி, பேரூராட்சி,ஊராட்சி , வட்ட , கிளை செயலாளர்கள் & நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்,