தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சி நீதிமன்றத்தில் இனி மாதம்தோறும் முதல் வாரத்தில் கட்டாய இலவச சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை நடைபெறும் . குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் அறிவிப்பு .
திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில்
துளசி பார்மசி உடன் இணைந்து இனி வரும் காலங்களில் அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில்
கட்டாயமாக இலவசமாக சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் சென்ற மாதம் மாண்புமிகு நீதிபதிகளால் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக
முதல் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு) பரிசோதனை முகாம் வரும் 5/12/2024 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நமது குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெறும்.
முகாமில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என வெங்கட் தெரிவித்துள்ளார்