Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விடுதியில் தங்கி படித்த 17 வயது மாணவியை தனியாக வீடு எடுத்து 2 மாதம் கர்ப்பம் ஆக்கிய 3 பேருக்கு வலை .

0

'- Advertisement -

 

Ad banner

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த17 வயது மாணவி, திருச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவனுக்கு அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த 22.9.2024 அன்று பெண்கள் விடுதியில் இருந்து வெளியே சென்ற மாணவி திடீரென காணவில்லை. இது குறித்து விடுதி நிர்வாகத்தினர் மாணவியின் தந்தைக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அவர் உடனடியாக திருச்சி சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் மாயமான தனது மகளை கண்டுபிடித்து தருமாறு கூறி இருந்தார். மேலும் இது குறித்து மாணவியின் தந்தை மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

TVK ad

இதையடுத்து திருச்சி போலீசார் நடத்திய விசாரணையில், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சீயப்பாடி கிராமத்தை சேர்ந்த சரவணன் மகன் விஜய்(வயது 23) என்பவா் மாணவியை சேலத்துக்கு காரில் அழைத்து சென்று ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்திருப்பது உறுதியானது.

இதையடுத்து திருச்சி போலீசார் சேலத்துக்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் கடந்த 14.11.2024 அன்று ஆஜர்படுத்தினர். பின்னர் அந்த மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது மாணவி பெற்றோர்களிடம் கூறுகையில், விஜய் தன்னை சேலத்துக்கு அழைத்து சென்று அங்குள்ள ஓரு வீட்டில் 2 மாதம் தங்க வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாதாக கூறினார்.

இதற்கு உடந்தையாக விஜய்யின் தம்பி விஜயராகவன் மற்றும் 2 பேர் இருந்ததாகவும், தற்போது 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் மாணவி கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்த விஜயராகவன் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.