திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்து நாளை நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்க அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு
திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் முன்னாள் மாமன்ற துணை மேயருமான ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
அஇஅதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் அணைக்கிணங்க
அமைப்புச் செயலாளர் நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான .தங்கமணி அறிவுறுத்தலின்படி
திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளைக் கண்டித்தும்,
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பராமரிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் விடியா திமுக அரசை கண்டித்தும்,
பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும்,
உயர்த்தப்பட்டுள்ள பல்வேறு வரிகளை உடனடியாக திரும்பிப் பெற வலியுறுத்தியும்…
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில்..
நாளை 20/08/24 செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணியளவில்
அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர், ப. மோகன்
தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அதுசமயம்
தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.