Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: 16 வயது சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய திமுக நிர்வாகி நண்பனுடன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

0

'- Advertisement -

 

Ad banner

TVK ad

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பெரமங்கலம் மணியம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது44) இவரது நண்பர் கண்ணன்(வயது 32). கூலித் தொழிலாளர்கள்.

ராஜ்குமார், அப்பகுதி தி.மு.க., கிளைச் செயலராக உள்ளார். இவர்கள் இருவரும் இரு மாதங்களுக்கு முன், அதே பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுமியை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தனர். கொலை மிரட்டல் விடுத்ததால், அவர்களைப் பற்றி யாரிடமும் சிறுமி சொல்லவில்லை.இந்நிலையில், சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு, டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்தார். அப்போது அவர், இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அவரிடம் பெற்றோர் விசாரித்ததில், ராஜ்குமாரும், கண்ணனும் தன்னை பலாத்காரம் செய்ததை சிறுமி கூறினார்.

புகாரின்படி, ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில், நேற்று முன்தினம் காலை ராஜ்குமாரையும், கண்ணனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.