திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்த தம்பதியின் 16 வயது மகள் கடந்த 2.5 ஆண்டுகளாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக அந்த இளைஞா் தன்னிடம் பேசாததால் மனஉளைச்சலில் இருந்த சிறுமி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.