Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கே.கே. நகரில் எலி பசையால் பல் துலக்கிய பெண் பரிதாப பலி.

0

 

திருச்சி மாவட்டம், கே.கே.நகர் கே.சாத்தனூரைச் சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 35). கொத்தனார். இவரது மனைவி ரேவதி (27).

அவர் கே.கே. நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சம்பவத்தன்று காலை, ரேவதி, எலிகளுக்குக் கொடுக்கப்பட்ட பசையை (விஷம்) பற்பசை என்று தவறாகக் கருதி பல் துலக்கியுள்ளார்.

 

பின்னர், வேலைக்குச் சென்ற ரேவதி, மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது வாந்தி எடுத்துள்ளார். இதை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூக்கத்தில் பற்பசை என நினைத்து எலிப் பசையால் பல் துலக்கிய பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.