திருச்சி மண்ணச்சநல்லுாரில் அதிமுக கட்சி அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.
மண்ணச்சநல்லுார் புதுச்செட்டி தெருவில் அமைக்கப்பட்டு உள்ள கட்சி அலுவலகத்தை திருச்சி புறநகர் மாவட்ட செயலாளரும், மண்ணச்சநல்லுார் தொகுதி வேட்பாளருமான மு.பரஞ்சோதி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் சமயபுரம் சின்னையன், முன்னாள் அமைச்சர் டி.பி. பூனாட்சி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ், மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன், பாமக பிரிண்ஸ், மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் ஆகாளி, ஜெயக்குமார், முசிறி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆம்பூர் ஜெயராமன், நகர
செயலாளர் துரை சக்திவேல், சமயபுரம் நகர செயலாளர் சம்பத்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் தியாகராஜன், லதா, கதிர்வேல் மற்றும் மண்ணச்சநல்லூர் மோகன்ராஜ், நாகமணி, துரைராஜ் மற்றும்
தோழமை கட்சி சேர்ந்த பாஜக பூனம்பாளையம் குமார், செல்லதுரை மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து வேட்பாளர் மு.பரஞ்ஜோதி 20,21,22 ஆகிய மூன்று நாட்கள் மண்ணச்சநல்லூர் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை பிரச்சாரம் செய்ய உள்ளார்.
கூட்டணி கட்சி நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள், தோழமை கட்சி நிர்வாகிகள் அனைவரும் திரளாக பிரச்சாரத்தில் கலந்து கொள்ளுமாறும் பரஞ்ஜோதி கேட்டுக் கொண்டார்.