திருச்சி 45வது வார்டு மக்கள் நலனுக்காக பாடுபடும் தஞ்சாயி பாலசுப்பிரமணியத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் ப.குமார் பிரச்சாரம்.
மக்கள் நலனுக்காக பாடுபடுவேன்.
திருச்சி 45 வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் தஞ்சாயி பாலசுப்பிரமணியம் உறுதி.
திருச்சி மாநகராட்சி 45–வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக பொன்மலை பகுதி அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியத்தின் மனைவி தஞ்சாயி போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து 45–வது வார்டில் திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் ப.குமார், வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்தார்.
அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரசாரத்தின் போது பொதுமக்கள் மத்தியில் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் பேசுகையில்:
பகுதி செயலாளர் பாலசுப்ரமணியன் நல்லவர், பண்பாளர், சுறுசுறுப்பானவர், மக்களுக்காக உழைக்க கூடியவர். இவரது மனைவிக்கு வாக்களித்தால் இந்த வார்டை முதன்மை வார்டாக மாற்றி காட்டுவார்கள் எனவே தஞ்சாயி பாலசுப்பிரமணியத்துக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.
திருச்சி, மாநகராட்சி 45–வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் தஞ்சாயி பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
2011 –16 வரை (பழைய 31–வது வார்டு) கவுன்சிலராக இருந்த போது பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. நடுப்பனக்கால் தெரு மற்றும் காவேரி நகர் பகுதியில் முன்னாள் எம்.பி. ப.குமார் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் பெறப்பட்டு ரேஷன் கடை கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்த உடன் தார்ச்சாலை, கான்கிரீட் சாலை, வடிகால் வசதி செய்து தரப்படும்.
மஞ்சத்திடல் ரெயில்வே கிராசிங்கில் பாலம் அமைக்க முயற்சித்ததன் பலனாக பாலம் அமைக்க பூர்வாக பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மாவடிக்குளம் முழுவதும் தூர்வாரி குளத்தின் கரையை உயர்த்தி பலப்படுத்தி குளத்தின் மெயின்ரோட்டில் ஒரு பகுதியில் நடைபாதை அமைக்க முன்னாள் எம்.பி. குமார் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று அப்போதைய முதல்வர் பழனிசாமி ரூ.193 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டு இப்போது முடிவடைந்து விட்டன.
இம்முறையும் என்னை வெற்றி பெற செய்தால் ஏற்கனவே, கவுன்சிலராக இருந்த போது செய்த வளர்ச்சிப் பணிகளை போல் இந்த முறையும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து மக்கள் நலனுக்காக பாடுபடுவேன் என்றார்.