திருச்சியில் திமுக தேர்தல் அலுவலகம் மூடல்.
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான இனிகோ இருதயராஜ் நேற்று திருச்சி மரக்கடை அருகே கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தை திறந்தார்.
முறைப்படி தேர்தல் ஆணையத்திடம் அலுவலகம் திறக்கப்படும் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் NOCயும் வாங்க படவேண்டும். ஆனால் முறைப்படி எந்த அனுமதியும் இல்லாமல் 100 மேற்பட்டோர் அமர சேர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேச மைக்வுடன் மெகா சைஸ் ஸ்பீக்கர்கள் என திமுக தேர்தல் அலுவலகம் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை திமுக கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலகத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி மேகலா மற்றும் காந்தி மார்க்கெட் காவல்துறை அதிகாரிகள் அனுமதி இல்லாமல் திறந்த கிழக்குத் தொகுதி சட்டமன்ற திமுக அலுவலகத்தை உடனடியாக மூடக்கோரியும் இதுகுறித்து வீடியோ மற்றும் போட்டோ பதிவை எடுத்துக் கொண்டு சென்றனர்.தற்போது கிழக்கு தொகுதி திமுக அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து வந்து திருச்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் முதல் அடி.