திருச்சி மண்ணச்சநல்லூர் திமுக செயல்வீரர்கள், வேட்பாளர் அறிமுக கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசும்போது இனிவரும் காலங்களில் திமுக ஆட்சி அமைப்பதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலில் பதவியேற்றுள்ளது.
இக்கூட்டத்தின் வாயிலாக என்னால் உணர முடிகின்றது.எனவே மன்னச்சநல்லூர் தொகுதி மக்கள் வேட்பாளர் கதிரவனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய திமுகவினர் கடுமையாக உழைக்க வேண்டும். வாக்காளர்கள் கதிரவனை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந் நிகழ்ச்சியில் வேட்பாளர் கதிரவன், வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மற்றும் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் முடிவில் நேரு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பின்னர் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் வேட்பாளர் கதிரவனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.