வரும் திமுக மதிமுக தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது. போட்டியிடும் ஒரு தொகுதி திருச்சா ? விருதுநகரா ? வைகோ பேட்டி
வரும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் மதிமுக இடையே தொகுதி உடன்பாடு இறுதிசெய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, தமிழகத்தில் தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையை தொடங்கி கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் மதிமுக இடையே ஒரு தொகுதி உடன்பாடு இறுதிசெய்யப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை (மார்ச்.8) அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்-வைகோ கையெழுத்திட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி உடன்பாடு இறுதிசெய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. எந்த தொகுதி என்பது குறித்து மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேசியபின் தெரியவிக்கப்படும்.
மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம். மாநிலங்களவை தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருப்பதால் தற்போது அதுகுறித்து பேசவில்லை என வைகோ தெரிவித்தார்.
மதிமுக நிறுவனர் வைகோ ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக தொடர்பு தான் மீண்டும் அவருக்கு அதை பொறுப்பு கொடுக்கலாம். திருச்சி அல்லது விருதுநகரில் துரை வைகோ போட்டி இட உள்ளதாக கூறப்படுகிறது . விரைவில் மதிமுக தொகுதி, வேட்பாளர் உள்ளிட்ட விவரங்களை விரைவில் அறிவிக்கும்.