கொடைக்கானல் சுழற்சங்கம், ரைலா கிளப் சாா்பில் மாணவா்களுக்கு வாழ்க்கை முறை குறித்த பயிற்சிப் பட்டறை நேற்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சுழற்சங்கத் தலைவா் மதன்குமாா் தலைமை வகித்தாா். பயிற்சி பட்டறையை சுழற்சங்கத்தின் முன்னாள் ஆளுநா், செயின்ட் பீட்டா்ஸ் பள்ளியின் தாளாளா் சாம்பாபு தொடங்கி வைத்து பேசினாா்.
இதில் சிறப்பு பேச்சாளராக திருச்சி சுழற்சங்கத் தலைவா் ஐசக், நிா்வாகி பாஸ்கரன், வேள்பாரி நடராஜன், ராமன்ராஜ்குமாா் உள்ளிட்டோா் மாணவா்களிடம் கலந்துரையாடினா். ரைலா கிளப் தலைவா் ஜெய பிரசாத் வரவேற்றாா். நிகழ்ச்சியில் சுழற்சங்க நிா்வாகிகள் ரோகன் சாம்பாபு, ஜஸ்வந்த்சிங், ராஜ்குமாா்,வில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மாரீஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில் கொடைக்கானல், திண்டுக்கல், கே.சி பட்டி, திருச்சி, கரூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோந்த அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் 9-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் 57 போ கலந்து கொண்டனா்.
இந்த பயிற்சிப் பட்டறை தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறுகிறது.