Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ரெயில்வே பணிமனையில் எஸ் ஆர் எம் யூ தொழிற்சங்க துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

0

'- Advertisement -

Ad banner

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TVK ad

பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 சட்டங்களாக மாற்றம் செய்ததை கண்டித்தும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றும் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் சுமார் 4000பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிலாளர்கள் பேரணியாக வந்து ரயில்வே பணிமனை வாசலில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.