Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பட்டப் பகலில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நான்கே முக்கால் பவுன் நகை திருட்டு.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சியில் பட்டப்பகலில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நான்கரைப் பவுன் செயின் திருட்டு.

TVK ad

திருச்சி பாலக்கரை இருதயபுரம் இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சகாயராஜ் (வயது 67). இவரது மனைவி நிர்மலா. இவர் தன் கழுத்தில் அணிந்திருந்த நான்கே முக்கால் பவுன் செயினை கழற்றி வீட்டில் வைத்து இருந்தார்.

பின்னர் கணவன் மனைவி இருவரும் கதவை பூட்டாமல் அருகில் உள்ள கடைக்கு சென்றனர். பின சற்று நேரம் கழித்து வீடு திரும்பியபோது மேஜை மீது வைத்திருந்த நான்கே முக்கால் பவுன் செயினை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது .

இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.