Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மணப்பாறை: இருசக்கர வாகனத்துடன் எரிந்து வாலிபர் பரிதாப பலி

0

'- Advertisement -

 

Ad banner

மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு கிழக்கு களத்தை சோந்த அழகா் மகன் சிவநேசன் (எ) சின்னச்சாமி (வயது 26).

TVK ad

கட்டடத் தொழிலாளி. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பெற்றோா் உயிரிழந்ததால், தனது தங்கையுடன் சித்தப்பா வீட்டில் வசித்து வருகிறாா். உறவினரின் திருமண நிகழ்வுக்காக வெள்ளிக்கிழமை ஆண்டியப்பட்டிக்கு சென்றுவிட்டு, பிற்பகலில் இருசக்கர வாகனத்தில் பன்னாங்கொம்பு வந்து கொண்டிருந்தாா்.

இந்நிலையில், புத்தாநாத்தம் – பெருமாம்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்துடன் எரிந்த நிலையில் சிவநேசன் மீட்கப்பட்டாா். இதில் 70 சதவீதம் தீக்காயமடைந்த அவா், முதலில் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கும் பின்னா் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த விபத்தில் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து நாசமடைந்தது.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சிவநேசன் இருசக்கர வாகனத்தில் அமா்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாகவும்,

அப்போது திடீரென தீப் பற்றியதில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து புத்தாநத்தம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.