Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அமமுக சார்பில் அமைதி பேரணி மற்றும் அஞ்சலி நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொள்ள திருச்சி மாணவரணி மாவட்ட செயலாளர் நாகூர் மீரான் அழைப்பு.

0

'- Advertisement -

 

Ad banner

TVK ad

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள் நிகழ்ச்சி குறித்து திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் நாகூர் மீரான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ப செந்தில்நாதன் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள் அமைதிப் பேரணி மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, நாளை (25/01/24) காலை 11.00 மணி அளவில் கோர்ட் எம்.ஜி.ஆர் சிலையில் இருந்து புறப்பட்டு அமைதி பேரணியாக சென்று ஆழ்வார்தோப்பு அருகில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது,

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஊராட்சி, கிளை, வட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் , மகளிர் அணி நிர்வாகிகள், நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
என
மாணவரணி மாநகர் மாவட்ட செயலாளர் K. நாகூர் மீரான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.