Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் மீனாட்சி பெட்ரோல் பங்கை மூடி வேலி அமைத்தது நெடுஞ்சாலைத்துறை .

'- Advertisement -

 

Ad banner

டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்த மீனாட்சி
பெட்ரோல் பங்க் முடல்.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் மீனாட்சி பெட்ரோல் பங்க் கடந்த 60 வருட காலமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில்
இந்த பெட்ரோல் பங்க் இடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது. எனவே இடத்தை காலி செய்யுங்கள் என்று நெடுஞ்சாலை துறையினர் பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நெடுஞ்சாலைத்துறைக்கு ஆக்கிரமிப்பை அகற்றும் அதிகாரம் இல்லை என்பதால் கலெக்டர் முடிவு செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி கலெக்டர் இடத்தை காலி செய்ய உத்தரவிட்டார்.இந்நிலையில் அந்த இடத்தில் இருக்கும் எரிபொருட்களை
வேறு இடத்திற்கு மாற்ற
எங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என கலெக்டரிடம், நெடுஞ்சாலைத்துறையிடம் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.இந்த நிலையில் இன்று கலெக்டர் உத்தரவின் பெயரில் நெடுஞ்சாலை துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து பெட்ரோல் பங்கை மூடினார்.

மேலும் அந்த இடத்தை சுற்றி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உதவி கோட்ட பொறியாளர் புகழேந்தி , பொறியாளர் அசோக் குமார் முன்னிலையில் வேலி அமைத்து இந்த இடம் நெடுஞ்சாலைக்கு சொந்தமானது என அறிவிப்பு போர்டு வைத்தனர் .

.இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

'- Advertisement -

Comments are closed, but trackbacks and pingbacks are open.