Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் அனைத்து இந்து இயக்கங்களின் சார்பில் கல்கி ராஜசேகர் தலைமையில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு .

0

'- Advertisement -

 

Ad banner

ஸ்ரீரங்கத்தில் கோயில் வளாகத்தில் அய்யப்ப பக்தர்களை தாக்கிய 3 ஊழியர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரியும் இந்து சமய அறநிலையத்
துறையை கண்டித்தும் அனைத்து இந்து இயக்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது.

 

TVK ad

அகில பாரத இந்து மகா சபா மாநிலத் தலைவர் கல்கி ராஜசேகர் தலைமையில் ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் முன்பு நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி இல்லாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து கோவில் இணை ஆணையரிடம் மனு கொடுத்து விட்டுசாமியிடம் வேண்டி வருவதாக தெரிவித்தனர்.

ஆனால் போலீசார் இதற்கு அனுமதி அளிக்க வில்லை.இதைதொடர்ந்து ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் அரங்கநாதன் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது ஸ்ரீரங்கம் கோவிலில் தற்போது ஏகாதசி விழா நடைபெறுவதால் போராட்டத்தை கைவிடும் படி போலீசார் கூறியதை தொடர்ந்து போராட்டக் காரர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அகில பாரத இந்து மகா சபா மாநிலத் தலைவர் கல்கி ராஜசேகர், மாநில துணைத் தலைவர் மாரி, மாவட்டத் தலைவர் அழகர், மாநில துணைச் செயலாளர் சிவபாலமூர்த்தி இளைஞர் அணி மாநில தலைவர் பிரசாந்த் , சக்தி சேனா நிறுவனத் தலைவர் அன்பு மணி, ஸ்ரீராம் சேனா நிறுவனத் தலைவர் நாகராஜ், அர்ஜுன் சேனா நிறுவனத் தலைவர் டவர் செல்வம், , இந்து சேனா மாநில பொதுச் செயலாளர் மணிவேல் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள திரண்டு வந்திருந்தனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.