தமிழகத்தில் தொடர்ந்து ஊழல் செய்து வரும் திமுகவுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது. திருச்சியில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் ‘
தமிழகத்தில் தொடர்ந்து ஊழல் செய்து வரும் திமுகவுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது , திருச்சியில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் குற்றச்சாட்டு.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழக அரசால் கட்டப்பட்டு வரும் பெருமிடுகு முத்தரையர், ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதர் மூன்று தலைவர்களின் மணிமண்டபத்தை திறக்க வேண்டும். ஊழல் கட்சி காங்கிரசை கண்டித்து திருச்சி மாநகர், மாவட்ட பாஜக கட்சியின்
ஓ பி சி அணி சார்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர், மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.
மாநில துணைத்தலைவர் முன்னாள் எம்பி கே பி ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் செய்து தொடர்பாளர், ஸ்ரீகாந்த், நிர்வாகிகள் புரட்சிக் கவிதாசன் இல.கண்ணன்,
புதுக்கோட்டை மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட நிர்வாகிகள் காளீஸ்வரன், ஒண்டிமுத்து, தண்டபாணி, செல்வதுரை, பாலன்,ஜெய் கர்ணா,எஸ் பி சரவணன்,ஓ பி சி மாவட்ட தலைவர் அழகேசன்,
கௌதம் நாகராஜ், யசோதன்,
புவனேஸ்வரி,
ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில்
மாநில துணைத்தலைவர் முன்னாள் எம்பி கே பி ராமலிங்கம் சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக அரசியலில் பாஜக ஒரு புதிய பாதையை உருவாக்கி உள்ளது. இந்த பாதையை பாஜக தலைவர் அண்ணாமலை வழி நடத்தி செல்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது இன்றைக்கு காங்கிரஸ் எம்பி ஒருவர் வீட்டில் ரூபாய் பல கோடி ஊழல் பணம் சிக்கி உள்ளது. கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும் என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு ஊழல்களை செய்து வரும் திமுகவுடன் காங்கிரஸ் கைகோர்த்து இன்றைக்கு வலம் வந்து கொண்டிருக்கிறது. இவர்கள் இரண்டு கட்சிகளையும் பொதுமக்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் விரட்டி அடிக்க வேண்டும். மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற தாரக மந்திரத்தில் செயல்பட நாம் செயல்பட வேண்டும் .இந்த நாட்டை வளர்ச்சி,
முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய ஒரே தலைவர் பிரதமர் மோடி தான். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியை மீண்டும் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். இன்றைக்கு சென்னையை புயல் தாக்கி பொதுமக்கள் பல துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். இதற்கு மத்திய அரசு நிதியை ஒதுக்கீடு செய்து உள்ளது .ஆனால் மாநில திமுக அரசு தாங்கள் நிதி ஒதுக்கியது போல் மாயயை ஏற்படுத்துகின்றன. கடந்த பல வருட காலமாக மத்திய அரசு கொடுக்கும் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல திட்ட நிதிகளை வாங்கிக் கொண்டு திமுக அரசு முறைகேடு செய்து உள்ளது. சுமார் 40,000கோடிக்கு மேல் மத்திய அரசின் நிதியை பெற்று திமுக அரசு முறைகேடு செய்து உள்ளது இவ்வாறு ராமலிங்கம் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் காளீஸ்வரன்,
தண்டபாணி,
சந்துரு,ஊடகப் பிரிவு தலைவர் முரளி,துணைத் தலைவர் வாசன் வேலி சிவகுமார்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன்,பெரியநாயகி சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பால்ராஜ்,மல்லி செல்வம்,
சந்தோஷ் மகளிர் அணி நிர்வாகிகள் லீமா சிவகுமார், புவனேஸ்வரி, ரேகா, வேளாங்கண்ணி,மோகன்ராஜ் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர் .