தா.பேட்டைக்கு அருகில் உள்ள காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ஆசிரியர் சித்ரா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தலைமை ஏற்று தலைமை உரையாற்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா அவர்கள் தனது தலைமை உரையில்
இன்றைய மாணவர்களே நாளைய சமுதாயத்தின் எதிர் காலத்தைத் தீர்மானிக்கக்கூடியவர்கள். ஊழல் அற்ற சமுதாயத்தை உருவாக்கவும் சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் பிறரை வழி நடத்தக்கூடிய ஆளுமை மிக்கவர்களாகவும் அவர்கள் தங்களை வடிவமைத்துக் கொள்வதோடு இந்தியாவை வல்லரசாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் மாணவர்களுக்கு இருக்கிறது. மாணவர்கள் கல்வியையும் ஒழுக்கத்தையும் இரு கண்களாகக் கொண்டு நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
ஆசிரியர்கள் சத்தியா ,சரவணன் தண்டபாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் தேவ சுந்தரி நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
விழாவின் முத்தாய்ப்பாக தலைமை ஆசிரியர் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கினார்.
மாணவர்களின் கடமையை அறிவுறுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த விழாவை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினரும் ஊர்ப் பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர் .