இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி சிபிஎம் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமையில் திருச்சி கலெக்டரிடம் மனு
திருச்சியில்
இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிபிஎம் அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமையில் பொதுமக்கள் கலெக்ரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது :
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எடமலைப்பட்டிபுதூர், கிராப்பட்டி, ராமச்சந்திராநகர்,செட்டியப்பட்டி, கே.கே.நகர், ராஜமாணிக்கபிள்ளைதெரு, ஓலையூர் பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் ஏழை மக்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அந்தந்த பகுதிகளிலேயே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும்,
திருச்சி மேற்கு தொகுதி பஞ்சப்பூர் மற்றும் பிராட்டியூர் பகுதிகளில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பல தலைமுறைகளாக வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.
கலெக்டரிடம் மனுவை கொடுத்த போது மணிமுத்து, , பழனிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.