ஸ்ரீரங்கத்தில் கேஸ் அடுப்பு கசிந்து ஓய்வு பெற்ற பெல் ஊழியர் தீயில் கருகி சாவு.
திருவரங்கம் சித்திரை வீதி இ.பி.எஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 63). பெல் ஓய்வு பெற்ற ஊழியர். இவரது மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் சிலிண்டரில் கியாஸ் கசிந்துள்ளது. அப்போது இவர் மின்சார சுவிட்சை போட்டுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக அவர் மீது தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .
பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று இறந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் ரங்கராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.