Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: சாலைகளை உடனடியாக சீரமைக்க கோரி சிந்தாமணி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

 

Ad banner

கடந்த ஜூலை 31 ஆம் தேதி திருச்சி சிந்தாமணி காவேரிநகரைச் சோந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஜெயஜோதி, தனது சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றபோது நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா். சிந்தாமணி பகுதியில் புதைவடிகால் திட்டப்பணிகளுக்கு தோண்டப்பட்ட சாலைகள் முறையாக சீரமைக்கப்படாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், அத்தகைய விபத்தில்தான் மாணவி உயிரிழந்தாா் எனவும், எனவே சாலையை விரைந்து சீரமைக்கக் கோரி அப்பகுதியினா் சாலை மறியல் நடத்த முயன்றனா். அப்போது விரைவில் சாலை சீரமைக்கப்படும் என போலீஸாா் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் அளித்த உறுதியின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இதுவரை அந்தச் சாலை முறையாக சீரமைக்கப்படவில்லை எனக் கூறி பொதுமக்கள் சிந்தாமணி பகுதியில் ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.அதிமுக எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துகுமார், வழக்கறிஞர்கள் கங்கைச்செல்வன், ஜெயராமன், தொழில் அதிபர் இன்ஜினியர் இப்ராம்ஷா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் அண்ணா சிலை விக்டர், பாஜக நவநீதகிருஷ்ணன், டி.கே.எஸ்.
புருஷோத்தமன் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் கண்டன உரை ஆற்றினர்.

மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பினா். இதில் திருச்சி, மேலசிந்தாமணி, கீழசிந்தாமணி, காந்திநகா், அந்தோனியாா் கோயில் தெரு, பூசாரி தெரு, பதுவை நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் பொதுமக்கள் பங்கேற்றனா்.

முடிவில் விபத்தில் பலியான மாணவி ஜெயஜோதியின் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.