Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மாநகரில் மதுரை மாநாடு குறித்த அதிமுக மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்.சிறப்பாக ஏற்பாடு செய்த தெற்கு மாவட்ட செயலாளர் குமார்.

0

'- Advertisement -

 

மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டுக்குப் பின் நிச்சயம் அரசியலில் மாற்றம் வரும் என்று துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில்அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்பதற்காக மாவட்டம் வாரியாக மூத்த நிர்வாகிகள் சென்று ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அதன்படி திருச்சி தெற்கு , வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.பி.யும், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான குமார் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, வளர்மதி, செல்லூர் ராஜூ, காமராஜ், ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா, விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்,
தர்மயுத்தம் அப்போது, மாவட்டத்தில் அதிக தொண்டர்களை திரட்டி வருபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்த பின்னர் அ.தி.மு.க.துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற 20-ந் தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு நிச்சயம் வெற்றி பெறும். இந்த மாநாட்டிற்கு பின் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும். மகளிர் உரிமை தொகை பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, உறுப்பினர் சேர்க்கைக்கு பொது மக்களை தி.மு.க.வினர் மிரட்டுகின்றனர். ஆனால் நாங்கள் ஆர்வம் உள்ளவர்களை மட்டுமே உறுப்பினராக சேர்த்துக்கொள்கிறோம்.

மதுரை மாநாட்டில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின், `தர்மயுத்தம்’ நடத்திய ஓ.பன்னீ்ர்செல்வம் தற்போது டி.டி.வி. தினகரனுடன் இணைந்து கொடநாடு பிரச்சினைக்காக போராட்டம் நடத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், வளர்மதி, எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் பொன் செல்வராஜ், முன்னாள் கொறடா மனோகரன்,ஆவின் சேர்மன் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன்,
முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா,கழக பொதுக்குழுஉறுப்பினர் சாந்தி,
கவுன்சிலர்கள்
அம்பிகாபதி,
அரவிந்தன்,எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் சிந்தை முத்துக்குமார், முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகரன்,
டிபன் கடை கார்த்திகேயன்,
டாஸ்மாக் பிளாட்டோ, எம்.கே.குமார்,  பேராசிரியர் பாபு, கோழிக்கடை பாலு. மற்றும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை, அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகரில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தினை மாநகர் மாவட்ட செயலாளர் அறிவிக்கப்படாத நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.