Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்கத்தின் பொதுக்கூட்டம்.

0

'- Advertisement -

 

தொகுப்பு தவணை தொகையை
கேரள அரசை போல் பிடித்தம் செய்ய வேண்டும்.

திருச்சி மாநகராட்சி மற்றும் நகராட்சி மற்றும் ஓய்வூதியர் சங்கத்தின் பொதுக்குழு, வெள்ளிவிழா மற்றும் நிர்வாகிகள் தேர்தல் கூட்டம் ஆகிய முப்பெரும் விழா திருச்சியில் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்க தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் விஸ்வலிங்கம் வரவேற்றார். நிதிநிலை அறிக்கையை பொருளாளர் திருஞானசம்பந்தம் சமர்பித்தார்.

மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநில பொதுச்செயலாளர் ராஜமுக்தி, மாநில தலைமை நிலைய செயலாளர் ஜானகிராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

தொகுப்பு தொகை;கான தவணை தொகை பிடித்தம் 15 ஆண்டுகளுக்கு பதிலாக கேரள மாநிலத்தில் 12ஆண்டுகளாக பிடித்தம் செய்வது போல் தமிழகத்திலும் 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்.

திருச்சி மாநகராட்சியில் ஓய்வூதியர்களை விபரங்களை ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளவும், வருடாந்திர வாழ்வு சான்றினை கைரேகை மூலம் ஆன்லைன் அனுப்ப ஏதுவாக கணினி மயமாக்க வேண்டும். ஓய்வூதியரின் மறைவுக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதியினை ரூ1லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் துணைச்செயலாளர் சேகர் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.