திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து திருட்டு .
திருச்ச தென்னூர் உழவர் சந்தை அருகே உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கமாகும்.
இந்த நிலையில் சம்பதவன்று கோவிலை பராமரித்து வரும் உய்யக்கொண்டான் திருமலை சண்முக நகரை சேர்ந்த கண்ணன் (வயது 50) என்பவர் இரவு கோவிலின் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். கடந்த 30 ந் தேதி இரவு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

காலையில் வந்து பார்த்த பொழுது கோவிலின்
வெளி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு உள்ளே சென்று பார்த்த பொழுது அம்மன் பிரகாரம் அருகில் உள்ள உண்டிகளின் பூட்டு உடைக்கப்பட்ட உண்டியலில் இருந்த காணிக்கை காசு, பணம் சிதறி கிடப்பத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து உடனடியாக தில்லை நகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு கண்ணன் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பிறகு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உக்கிர காளியம்மன் கோவிலுக்கு சென்று சோதனை நடத்தினர்.போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் உண்டியலில் இருந்த பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியலை உடைத்து நகையை திருடிய மர்ம ஆசாமிகளை வலை விசி தேடி வருகின்றனர்.
உக்கிர காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய சம்பவம் தென்னூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.