திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக.செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 34 வது வார்டில் சுப்பிரமணியபுரம் எம்.ஜி.ஆர். சிலை, ஏரிக்கரை சாலையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட எல்.இ.டி விளக்குகளை திறந்து வைத்தார்.
அதே போல் அந்தோணியார் கோவில் தெருவில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட தார்ச்சாலையினை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் மனோகரன், மாவட்ட துணைச்செயலாளர் வனிதா,பகுதி செயலாளர்கள் ஏர்போர்ட் விஜி, கருமண்டபம் ஞானசேகர், அண்ணா தொழிற்சங்கம் ராஜேந்திரன், வர்த்தகர் பிரிவு டிபன் கடை கார்த்திகேயன், மீனவர் அணி அப்பாஸ், தாயார் சீனிவாசன், சுமங்கலிசம்பத், வக்கீல் ஜெயப்பிரியா, செங்கல் மணி, காந்திநகர் சரவணன், அரப்ஷா, அய்யூப், வட்டச் செயலாளர்கள் செல்லப்பா, கல்லுக்குழி முருகன், பிரகதீஷ், சந்துக்கடை சந்துரு, ஆட்டோ ரஜினி, விவசாய அணி விஸ்வா, மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்,