

திருச்சி அரசு மருத்துவமனையில்
தண்டனை சிறை கைது சாவு .
திருவாரூர் மாவட்டம் கல்லக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி Cவயது 60) இவர் கடந்த 2015 ம் ஆண்டு நடந்த ஒரு வழக்கு தொடர்பாக வீரப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பத்தாண்டுகள் சிறை தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீராசாமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் போக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வீராசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிறை அதிகாரி சண்முகசுந்தரம்
கே.கே .நகர் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

