திருச்சி: அமமுக பிரமுகர் மீது டிராபிக் ஜாம் ஹோட்டல் அதிபர் கொலை வெறி தாக்குதல்.மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் நேரில் சென்று ஆறுதல்.
திருச்சி மலைக்கோட்டை பகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக 14வது வட்ட செயலாளர் சுடலைமுத்து.இவர் அப்பகுதியில் மக்கள் பணி மற்றும் கட்சி பணியை சீரிய முறையில் செய்து வருபவர்.
மிகவும் அமைதியான இவர் அனைவரிடமும் இன்முகத்துடன் பேசக் கூடியவர்.
இன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சறுக்குப் பாறையில் அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்காக அப்பகுதியில் கோட்டை காவல் நிலையத்தில் அனுமதி பெற்று பிளக்ஸ் போர்டு வைத்திருந்தார்.
அப்பகுதியில் உள்ள டிராபிக் ஜாம் ஹோட்டல் உரிமையாளர் போர்டு வைத்த மூன்று நாட்களுக்குப் பின் தன் கடையை மறைப்பதாக கூறி உடனடியாக அகற்றும் படி நேற்று மாலை கூறியுள்ளார்.
நாளை சித்ரா பௌர்ணமி அன்னதானம் முடிந்தவுடன் போர்டே அகற்றி விடுகிறேன் எனக் கூறியுள்ளார், இதை ஏற்றுக் கொள்ளாத டிராபிக் ஜாம் ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் 10 பேர் கொலை வெறியுடன் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் கண், மூக்கு என பல இடங்களிலும் ரத்த காயம் ஏற்பட்டு பலத்த காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் பதவியேற்ற நாள் முதல் கட்சியின் தலைவர் முதல் மாவட்ட செயலாளர்கள் பகுதி, வட்ட, அணி நிர்வாகிகள் மற்றும் அடிப்படைத் தொண்டர்கள் வரை அனைவரையும் நேரில் சந்தித்து கட்சி வளர்ச்சி பணி குறித்து ஆலோசித்து வரும் 47ம் தேதி வார்டு கவுன்சிலர் செந்தில்நாதன் தாக்கப்பட்ட தகவல் அறிந்த சில நிமிடங்களில் அரசு மருத்துவமனை விரைந்து சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தாக்கிய நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார் அதன் பெயரில் ஹோட்டல் உரிமையாளர் மயில் மற்றும் ஊழியர் நமச்சிவாயம் ஆகிய இதுவரையும் கோட்டை போலீசார் கைது செய்தனர்.