Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடைபெற்ற குறும்பட போட்டியில் தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட அச்சம் தவிர் குறும்படம் 3ம் இடம் பெற்றது.

0

 

தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குறும்பட போட்டி நடைபெற்று வருகிறது. 2022 ம் ஆண்டுக்கான குறும்பட போட்டியில் தமிழகத்தில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட அச்சம் தவிர் குறும்படம் தேசிய அளவில் 3 ம் இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் பல்வேறு மனித உரிமை மீறல்கள் பெண்கள் உரிமை குழந்தைகள் உரிமை போன்ற தலைப்புகளில் விழிப்புணர்வு குறும்படங்களுக்கான போட்டிகளை நடத்துகிறது, மேற்சொன்ன தலைப்புகளில் கதை கருவாக எடுக்கப்படும் குறும்படங்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழ், இந்தி, மலையாளம் தெலுங்கு, மராத்தியம், கன்னடம், வங்காளம், குஜராத்தி, ஆங்கிலம், கொங்கணி, அசாமிஸ் உள்ளிட்ட மொழிகளில் எடுக்கப்பட்ட குறும்படங்கள் சுமார் 123 குறும்படங்கள் போட்டியில் பங்கு பெற்றது. இப்படங்களை
பார்த்து தேர்வு செய்யும் நடுவர்களாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் அருண் மிஸ்ரா அவர்கள் தலைமையில் உறுப்பினர்கள் Dr.தயானேஷ்வர் எம்.முளே, ராஜிவ் ஜெயின் பொது செயலாளர் தேவேந்திர குமார் சிங், மனோஜ் யாதவ் சட்ட பதிவாளர் சுர்ஜித் தே இணை செயலாளர்கள் அனிதா சின்ஹா, தேவேந்திர குமார், நிம் இணை இயக்குனர் (M&C) ஜெய்மினி சிரிவட்சஸவா லீலாதர் மந்லாய் ஆவணப்படம் இயக்குனரும் தூர்தர்ஷன் (DG AIR) மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் பேராசிரியர் சங்கீதா பிரன்வேந்திரா அடங்கிய குழுவினர் பார்த்து அதிலிருந்து சிறந்த படங்களை தேர்வு செய்ததில்

முதல் பரிசை மராத்திய மொழியில் எடுக்கப்பட்ட குறும்படம் சேர்போக் படமும்,

2ம் பரிசை அசாமிய மொழியில் எடுக்கப்பட்ட எனேபில்ட் படமும்,

3 ம் பரிசை தமிழகத்தில் இருந்து தமிழ் படமான அச்சம் தவிர் குறும்படம் தேசிய அளவில் 3ம் இடம் பெற்று வெற்றி பெற்றது.

அச்சம் தவிர் படத்தின் வெற்றி தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பதுடன் கோவை, திருச்சி, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கும் படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் கிடைத்த மகத்தான வெற்றியாக பார்க்கபடுகிறது.

இப்படத்தை கோவையை சேர்ந்த அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் அமைப்பின் சார்பில் அதன் நிறுவன தலைவர் ஆர். கே.குமார் முனைவர் வி. எச். சுப்ரமணியம் ஆகியோர் தயாரிப்பில் எடுக்கப்பட்டது. இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எடிட்டிங் மற்றும் இயக்கத்தை செய்துள்ளார் குறும்பட இயக்குனர் குமார் தங்கவேல் அச்சம் தவிர் படத்தில் இணை இயக்குனராகவும் இப்படத்தில் வில்லனாகவும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான ஆர். ஏ.தாமஸ் பணியாற்றியுள்ளார் இப்படத்தில் ஒளிப்பதிவு யாசின், இசை பேராவூரணி பாலகுமார் , ஸ்கிரிப்ட் அங்கமுத்து, பாடல் சாஜித்பானு, இணை தயாரிப்பு வி. கே.பாபு ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இப்படத்தில் நடிகர்கள் கந்தசாமி ஆண்டனி தாமஸ் அசோக் குமார் வேலுசாமி நடிகைகள் வென்மதி பேராசிரியர் அனிதா ஷில்பா பியூலா சுலோஷனா திருப்பூர் மீனா ஆகியோர் நடித்துள்ளனர்.

விரைவில் தலைநகர் டெல்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில் அச்சம் தவிர் படக்குழுவினர் கலந்து கொண்டு விருது பெறவுள்ளனர்.
இப் படக்குழுவினர் கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் உணவு பாதுகாப்புதுறை (FSSAI) சார்பில் நடைபெற்ற உணவு திருவிழா குறும்பட போட்டியில் கலந்து கொண்டு என் கடமை என்கிற விழிப்புணர்வு குறும்படத்திற்க்கா முதல் பரிசை பெற்றனர் என்பது குறிப்பிடதக்கது

Leave A Reply

Your email address will not be published.