திருச்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும்,
சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவரும்,
முன்னாள் அதிமுக கவுன்சிலருமான சகாதேவ பாண்டியன் இன்று அதிகாலை மாரடைப்பால் இயற்கை எய்தினார்.
இவருக்கு நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்டது.அவரது குடும்பத்தினால் இவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன் இன்றி காலமானார்.
அனைவரிடமும் இனிமையாக சிரித்த முகத்துடன் பழகக்கூடிய சகாதேவ பாண்டியனின் இழப்பு அதிமுகவினருக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வி.என்.நகரில் உள்ள அவரது வீட்டில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.ஏராளமான அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.