Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் நிவாரண உதவி.

0

'- Advertisement -

 

திருச்சி எடமலைப்பட்டி புதூரில்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி
அதிமுக சார்பில் வழங்கப்பட்டது.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது வீடு தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தது. இதில் பொருட்கள் நாசமாயின.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயரும், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளருமான சீனிவாசன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.

இந்நிகழ்வில் பகுதி செயலாளர்கள் கலைவாணன், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, வட்ட செயலாளர்கள் வசந்தம் செல்வமணி, கே.சி.பி.ஆனந்த், சிங்காரவேலன், மற்றும் சுப்பிரமணி சார்லஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.