தந்தையுடன் ஏற்பட்ட தகராறில்
11/2 வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய் மாமனுக்கு ஆயுள் தண்டனை.
திருச்சி மாவட்டம் முசிறி ஆமூர் கல்யாண சுந்தரம் தெருவை சேர்ந்தவர் முருகையா. இவரது மனைவி சுபாஷினி. இவர்களுக்கு சாஞ்சனா ஸ்ரீ, சாதனா ஸ்ரீ என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தது. இருவருக்கும் ஒன்றரை வயது. இதில் சாதனா ஸ்ரீ முசிறி சடையப்பன் நகரில் உள்ள சுபாஷினியின் பெற்றோர் வீட்டில் வளர்ந்து வருகிறது.
இதற்கிடையில் சுபாஷினியின் தந்தை சாமிதாசுக்கும் அவரது மகன் லோகநாதனுக்கும் இடையே சொத்து பிரச்சனை சம்மந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது சொத்து பறிபோய் விடுமோ என்ற எண்ணத்தில் லோகநாதன் தனது சகோதரி குழந்தையான சாஞ்சனா ஸ்ரீ கட்டிலில் படித்த போது அடித்து கொலை செய்தார்.
இந்த சம்பவம் கடந்த 04 – 01 – 2019 அன்று நடந்தது . இதுகுறித்து முசிறி போலீசார் வழக்கு பதிந்து தாய்மாமன் லோகநாதனை கைது செய்தனர் .இந்த வழக்கு திருச்சி முதல் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வ முத்துக்குமார் குழந்தையை கொலை செய்ததாக தாய்மாமன் லோகநாதனுக்கு மூன்று ஆயுள் தண்டனையும் மூன்றாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.