Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிப்பலன் –

0

'- Advertisement -

Ad banner

இன்றைய ராசிப்பலன் – 18.01.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் ஒற்றுமை குறைய கூடிய சூழல் உண்டாகும்.எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் நீங்கும்.எந்த செயலையும் சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்
உங்கள் ராசிக்கு இனிய செய்தி இல்லம் தேடிவரும். உறவினர் வருகை உள்ளத்தில் மகிழ்ச்சியை கொடுக்கும். உத்யோகத்தில் புதிய சலுகை அறிமுகம் படுத்தி லாபம் உண்டாகும். உடல்நலம் சீராக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும். சேமிப்பு உயரும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி உண்டாகும். பெற்றோர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். தொழிலில் பல புதிய மாற்றம் லாபத்தை கொடுக்கும். வங்கி கடன் எளிதில் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்யோகஸ்தர்களுக்கு பணி சுமை நீங்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி உண்டாகும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் பணியில் நிம்மதி கிடைக்கும். உடன் இருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் தடைக்கு பின் வெற்றி உண்டாகும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். வீட்டில் தேவையில்லாத பிரச்சனை இருக்கும். சுபகாரிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் வேண்டாம். எதிலும் கவனம் வேண்டும்.
கன்னி
உங்களின் ராசிக்கு அலுவலகப் பணிகளில் ஆர்வமுடன் இருப்பீர்கள். வீட்டில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாகனம் வாங்க கூடும்.தெய்வ வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு வீட்டில் மங்கல நிகழ்வு இருக்கும். குழந்தைகளோடு இருந்த கருத்துவேறுபாடு அகலும். தொழிலில் திறமைகள் பாராட்டப்படும். புதிய வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டம் வெற்றியை கொடுக்கும். புதிய பொருள் சேர்க்கை இருக்கும். கடன் பிரச்சனை நீங்கும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு உடல் நிலையில் சற்று சோர்வும் சுறுசுறுப்பு இல்லாமலும் இருக்கும். உத்தியோக வியாபாரத்தில் லாபம் குறையும்.உறவினர் வருகையால் வீட்டில் வீண் செலவு இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியம் உண்டாகும்.
தனுசு
உங்கள் ராசிக்கு உறவினர்களால் வீட்டில் நிம்மதி இல்லாத நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை இருக்கும். செலவுகளை குறைப்பதன் மூலம் பண பிரச்சனை நீங்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும்.
மகரம்
உங்கள் ராசிக்கு வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். திருமண பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி இருக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமாக இருக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவு இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கும். உறவினர்களால் வீண் மனஸ்தாபம் இருக்கும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சனையை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிடைக்கும்.
மீனம்
உங்கள் ராசிக்கு பண வரவு அமோகமாக இருக்கும். சுப செலவு இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிடைக்கும். சேமிப்பு உயரும். நண்பர்களின் ஆலோசனையால் வியாபாரம் சீராக இருக்கும். வருமானம் பெருகும். கடன்கள் குறையும். புதிய பொருள் வாங்குவீர்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.