திருச்சி தாராநல்லூர் கீரை கடை பஜாரில் எம்ஜிஆரின் 106 வது பிறந்த தின விழா அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் சகாதேவ்பாண்டியன் வரவேற்பு உரையாற்றினார்.
கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, நிர்வாகிகள் ஜாக்குலின், சுரேஷ்குப்தா, நாகநாதர் பாண்டி, வெல்லமண்டி பெருமாள், ஏ.டி.பி. ராஜேந்திரன், ஏர்போர்ட் விஜி, சகாபுதீன்,கவுன்சிலர்கள் அரவிந்தன் கோ.கு.அம்பிகாபதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி மாநகர், மாவட்ட மாணவரணி செயலாளர்,ஆவின் சேர்மன் கார்த்திகேயன் பேசும் பொழுது:- கடந்த2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்களிடம் பொய் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது. அதன் பிறகு மக்களுக்கு எந்தவித நன்மையும் திமுக அரசு செய்யவில்லை.
எனவே பொதுமக்கள் வருகின்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவை வெற்றி பெற செய்வார்கள் என்று பேசினார்.
கூட்டத்தில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் பேசும் பொழுது, திருச்சி மாநகராட்சியில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பெரிய அளவில் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. மாறாக எங்கு பார்த்தாலும் சாலைகளை தோண்டி போட்டு வைத்துள்ளனர். மேலும் பொது மக்களுக்கு மின் கட்டணம் ,சொத்து வரியை உயர்த்தி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர்.எனவே வருகின்ற ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் 40க்கு 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் முன்னாள் எம்பி ரத்தினவேல் பேசும் பொழுது, திமுக அரசு பொறுப்புயேற்றதில் இருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு உள்ளது என்று நான் உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. பொதுமக்கள் அனைவருக்கும் இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்று நன்கு தெரியும். ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழகம் அமைதி பூங்காக இருந்தது. அவர் கட்சியையும், ஆட்சியையும், சிறப்பாக நடத்தி வந்தார். வருகின்ற ஈரோடு இடைத்தேர்தலிலும், 2024ம் ஆண்டு வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி வெற்றியை தேடி தர வேண்டும் என்று இந்த நாளில் சபதம் எடுக்க வேண்டும் என்று பேசினார்
.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தாமோதரன் பேசும் பொழுது எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு கட்சியிலும் ஆட்சியிலும், தொண்டர்களுக்கும் மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளைசெய்து வருபவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் சோதனையான காலத்தில் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி காட்டியவர். வருகின்ற ஈரோடு இடைத்தேர்தலும் சரி வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலோடு சட்டசபைக்கும் தேர்தல் வந்தாலும் சரி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை அமைக்கும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வருவார் என்று பேசினார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் அன்பழகன்,அதிமுக நிர்வாகிகள் இலியாஸ், மலைக்கோட்டை ஜெகதீசன், ராஜ்மோகன், என்ஜினியர் ரமேஷ், அப்பாகுட்டி, ஜெயக்குமார்,கேபி. ராமநாதன் சக்திவேல் தர்கா காஜா, வக்கீல்கள் சசிகுமார், ஜெயராமன், ராமலிங்கம், கல்லுக்குழி பாலசுப்பிரமணியன், சிந்தை ராமச்சந்திரன், ரோஜர் இப்ராஹிம் ஷா, டைமன் தாமோதரன், சீனிவாசன், எடத்தெரு பாபு, வசந்தம் செல்வமணி, எ.புதூர் வசந்தகுமார், வண்ணார்பேட்டை ராஜன், பொன்ராஜ் வரகனேரி சதீஷ், ராஜா,காசிபாளையம் சுரேஷ்குமார் ,ஆவின் குமார் நத்தர்ஷா, கே.பி.கண்ணன் கயிலை கோபி, கேடி. தங்கராஜ்,
,உடையான்பட்டி செல்வம்,கமலஹாசன்,வெல்லமண்டி கன்னியப்பன், ஜானகிராமன்,
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.