Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்டத்தில் 34,288 வாக்காளர்கள் நீக்கம். இறுதிப் பட்டியலை வெளியிட்டார் கலெக்டர்.

0

'- Advertisement -

அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி ஸ்ரீரங்கம்.
திருச்சி மாவட்டத்தில் 34,288 வாக்காளர்கள் அதிரடியாக நீக்கம்
இறுதிப் பட்டியலை வெளியிட்டார் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஜனவரி 1-ந் தேதி 2023 ஆம் ஆண்டை தகுதி ஏற்பு நாளாக கொண்டு திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2023 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 9-11-2022 முதல் 30-11- 2022 வரை நடைபெற்றது. அதன் அடிப்படையில் தற்போது 2023 -ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து, இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று வெளியிட்டார்.
அதில் திருச்சி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களாக 23,10,413 பேர் உள்ளனர். அதில் 11,89,933 பெண்களும்
11,20,158 ஆண்களும்
322 மாற்று பாலினத்தவரும்
9 சட்ட மன்ற தொகுதிகளில் அதிக வாக்களர்களை கொண்ட தொகுதியாக 3,01,659 வாக்காளர்களுடன் ஸ்ரீரங்கம் தொகுதியும்,
குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதியாக 2,18,971 வாக்காளர்களை கொண்டு லால்குடி தொகுதியும் உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் தற்போது 2544 வாக்குச்சாவடிகள் உள்ளது.இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு படிவம் 6 -ன் மூலம் புதிதாக 43,423 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்த மற்றும் நிரந்தரமாக குடி பெயர்ந்த வாக்காளர்கள் படிவம் 7 -ன் மூலமாக 34 ஆயிரத்து 288 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை இறுதி வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக் கொள்ளுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.