Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கோர்ட் உத்தரவையும் மீறி மாமியாரை வீட்டை விட்டு வெளியேற்றிய மருமகள். 78 வயது மூதாட்டி வீட்டின் முன் தர்ணா

0

'- Advertisement -

திருச்சியில் கோர்ட் உத்தரவையும் மீறி மாமியாரை வீட்டை விட்டு வெளியேற்றிய மருமகள். 78 வயது பாட்டி வீட்டின் முன் அமர்ந்து தர்ணா.

Ad banner

ஓய்வு பெற்ற தாசில்தார் பாலசுப்ரமணியன் என்பவரது மனைவி சரோஜா (வயது 78) தனது மூத்தமகன் செந்தில்குமார் என்பவருக்கு தனது வீட்டைதான் செட்டில்மென்ட் எழுதிவைத்தார். அதனை அவர் தனது 2-ஆவது மனைவி
ஸ்ரீ தேவி என்பவருக்கு
தான செட்டில்மென்ட் எழுதி கொடுத்துவிட்டார்.

இருப்பினும் அதே வீட்டில் முதல் மனைவியின் மகன் சியாம் பாலாஜி தனது தாயார் சரோஜா 2 ஆவது மனைவி ஸ்ரீ தேவியுடன் இணைந்து குடும்பமாக வாழ்ந்துவந்தார்

கடந்த 22.11.2022 அன்று பேரன் சியாம் பாலாஜி சாலை விபத்தில் மரணமடைந்தார்

இந்த அதிர்ச்சி தாங்காது மகன் செந்தில்குமார் 25.11.2022 அன்று மரணமடைந்தார்.

TVK ad

கர்மகாரியம் இருவருக்கும் 8.12..2022 அன்று முடிந்தவுடன் மருமகள் ஸ்ரீ தேவி மாமியார் சரோஜாவின் துணிமணி மற்றும் சமன்களை வெளியே தூக்கி போட்டு அவரை வீட்டை விட்டு தூரத்தினார்

இதனால் சரோஜா திருச்சி கூடுதல் வழக்கு (DVC No.96 / 2022) தாக்கல் செய்தார்.

அதனை விசாரணை செய்த நீதிமன்றம் முதிய பெண்மணி சரோஜா அதே வீட்டில் குடியிருக்கவேண்டும் (குடியிருப்பு உத்தரவு) என்றும் அதனை மருமகள் தடை செய்யக்கூடாது
என்றும்
கண்டோன்மென்ட் காவல் ஆய்வாளர் பாதுகாப்பு (Protection order) வழங்க வேண்டும் என்றும் 16.12.2022 அன்று உத்தரவிட்டது

இந்த உத்தரவுடனும் காவல்துறையுடனும் சென்ற முதிய ‘பெண்மணி சரோஜாவை மருமகள் ஸ்ரீ தேவி வீட்டினுள் அனுமதிக்க மறுத்து மீண்டும் துரத்திவிட்டார்.

இதனால் வேறுவழியின்றி தனது வீட்டிற்குள் ( பொன்னகர் திண்டுக்கல் சாலை உதயம் சூப்பர்மார்க்கெட் அருகில்) அனுமதிக்க வேண்டிய
மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தலையிட்டு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டிய நிலையில்
தர்ணா போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார் 78 வயது முதிய பெண்மணி சரோஜா.

தொடர்புக்கு 9443016862.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.