Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திருவானைக்காவலில் காவிரி டாடா மோட்டார்ஸின் புதிய ஷோரூம் திறப்பு விழா.

0

'- Advertisement -

திருச்சி திருவானைக்காவலில் காவேரி டாடா மோட்டார்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா.

Ad banner

திருச்சி திருவானைக்காவலில் காவேரி டாடா மோட்டார்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.

தமிழக மக்களிடையே
நன்மதிப்பை பெற்ற மிகவும் பிரபலமடைந்த காவேரி டாடா மோட்டார்ஸ் தமிழகம் முழுவதும் 13 இடங்களில்
சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

திருச்சி கருமண்டபத்தில் ஏற்கனவே ஒரு ஷோரூம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சி திருவானைக்காவல் சென்னை பைபாஸ் சாலையில் தென்னிந்தியாவிலேயே பிரமாண்டமான காவேரி டாடா
மோட்டார்ஸ் புதிய ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று (13.08.2022) காலை  டாடா மோட்டார்ஸ் தலைமை விற்பனை அதிகாரி ரமேஷ் துரைராஜன் தலைமையில் நடைபெற்றது.

காவேரி டாடா நிறுவன இயக்குனர்கள் மணிவண்ணன், இளங்கோ, சிபி ஆகியோர் திறப்பு விழாவிற்கு வருகை தந்தவர்களை வரவேற்றனர்.

விழாவில் டாடா மோட் டார்ஸ் தலைமை விற்பனை அதிகாரி ரமேஷ் துரைராஜன், மண்டல மேலாளர் கோபி, டாக்டர் குருசரண் மற்றும் அமுதா மணிவண்ணன் ஆகியோர்
குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி
வைத்தனர்.

இந்த ஷோரூமில் அனைத்து விதமாக புதிய டாடா கார்கள் விற்பனைக்கு உள்ளன.

திறப்பு விழாவில் முதல் விற்பனையை காவேரி டாடா மோட்டார்ஸ் இயக்குனர் இளங்கோ டாடா மின்சார வாகனம் ‘டாடா நெக்ஸ் சான்’ கார் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

விழாவில் கண்ணப்பா ஓட்டல் கண்ணன், அண்ணாமலைநகர் ராஜ்குமார், சீத்தாபதி,பி.ஆர்.எஸ்.ரமேஷ், ராமின் சந்திரசேகர், கோச்சர் திலீப், டாக்டர் பார்க்கவன் பச்சமுத்து மற்றும் தொழில் அதிபர்கள், வியாபார பிரமுகர்கள், நண்பர்கள் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

மேலும் இந்த ஷோரூமில் கார்கள் சார்ஜ் செய்வதற்கு ஜார்ஜிங் பாயிண்ட் உள்ளது. இந்தியாவிலேயே மின்சார கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.