Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் மூதாட்டி குளியல் அறையில் தீக்குளித்து சாவு.

0

'- Advertisement -

 

Ad banner

ஸ்ரீரங்கத்தில் மூதாட்டி குளியல் அறையில் தீக்குளித்து சாவு.

TVK ad

திருவரங்கம் தெற்கு தேவி தெருவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 80). தனது மகன் பாலு வீட்டில் வசித்து வந்த இவர், வயது முதிர்வு காரணமாக மனமடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த லட்சுமி நேற்று மதியம் 1.30 மணி அளவில் வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்று, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலு, அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பாலு கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.