திருச்சி மாவட்டத்தில்
நீதிமன்றங்களில்
தேசிய மக்கள் நீதிமன்றம்.நாளை நடக்கிறது .

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படியும், திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கே.பாபு உத்தரவின்படியும் நாளை(சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டு வளாகத்திலும் நடைபெற உள்ளது. திருச்சி கோர்ட்டில் 16 அமர்வுகளும், மணப்பாறை, துறையூர், முசிறி, லால்குடி, ஸ்ரீரங்கம் தலா ஒரு அமர்வுகள் என்று 21 அமர்வுகள் மூலம் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. சாலை விபத்து இழப்பீடு சம்பந்தப்பட்ட கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு, மின்சார பயன்பாடு, வீட்டு வரி, குடிநீர் வரி, ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு வழக்குகள், தொழிலாளர் நலன், இழப்பீடு வழக்குகள், கல்வி கடன், வங்கி கடன் சம்பந்தமான வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். வழக்காடிகள் நேரடியாக பங்கேற்று சமாதானமாகவும், விரைவாகவும் முடித்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இழப்பீட்டு தொகை, பிற பிரச்சினைகளை இருதரப்பினர் சம்மதத்துடன் விரைவில் தீர்க்கவும் மக்கள் நீதிமன்றங்கள் வழியாக செய்கிறது.
இந்த தகவலை திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான எஸ்.சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

