திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் ‘ஃபீனிக்ஸ் 2026’ கலைத் திருவிழா மற்றும் கலாச்சார கொண்டாட்டம்
திருச்சி தாயனுர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கேர் பொறியியல் கல்லூரியில் (தன்னாட்சி) ‘ஃபீனிக்ஸ் 2026’ (Phoenix ’26) என்ற பிரம்மாண்டக் கல்லூரி கலைத் திருவிழா மற்றும் கலாச்சார நிகழ்வு மிகக் கோலாகலமாகத் தொடங்கியது.
மாணவர்களின் தனித்திறமைகள் மற்றும் கலாச்சார உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வு, கல்லூரி வளாகத்தில் காலை 9:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கேர் கல்வி குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி ப்ரதிவ் செந்த் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் சாந்தி முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்வில் கல்லூரி புலன்மையாளர்கள் (Deans), அனைத்துத் துறைத் தலைவர்கள் (HODs), பேராசிரியர்கள் மற்றும் திரளான மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
இவ்விழாவை கல்லூரியின் சிவில் பொறியியல் துறை (Civil Engineering Department) மற்றும் அனைத்துக் மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் (Club Coordinators) இணைந்து மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்: காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை மாணவர்களின் பல்வேறு படைப்பாற்றல் திறன்களை வெளிப்படுத்தும் ‘கிளப் கார்னிவல்’ (Club Carnival) நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மாலை 5:00 மணி முதல் 8:30 மணி வரை கல்லூரியின் மத்திய சதுக்கத்தில் (Central Square) ‘கலாச்சார இரவு’ (Cultural Night – Finale) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மாலை நிகழ்வில் பேராசிரியர்களின் சிறப்பு கலைநிகழ்ச்சி, ‘மிஸ்டர் மற்றும் மிஸ் ஃபீனிக்ஸ் 2026’ போட்டி, தனி நபர் மற்றும் குழு நடனங்கள், தனி நபர் மற்றும் குழு பாடல்கள், இசைக்கருவிகளின் இசை நிகழ்ச்சி, குறும்படத் திரையிடல் மற்றும் அனைத்துக் மன்றங்களின் கூட்டு கலைநிகழ்ச்சிகள் ஆகியவை பார்வையாளர்களைக் கவர்ந்தன.
விழாவின் நிறைவாக, மன்றங்களின் அலுவலர்களுக்கு மதிப்பளித்தல், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்குதல், ‘மிஸ்டர் & மிஸ் ஃபீனிக்ஸ் 2026’ பட்டமளிப்பு மற்றும் நேரடி டி.ஜே (DJ) இசையுடன் கூடிய நன்றியுரை நிகழ்வும் கோலாகலமாக நடைபெற்றது.

