Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வீரமணிகளுக்கு சிசிடிவி வைத்து சாமரம் வீசும் சாந்திகளை விட கொடூரமானவர்கள், அரிதாரம் பூசாமல் நாடகமாடும் இவர்கள்தான், திருச்சி முன்னாள் கவுன்சிலர் செந்தில்நாதன்

0

'- Advertisement -

திருச்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் ப. செந்தில்நாதன் கடும் கண்டனம்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Ad banner

ஈயம் பூசண மாதிரி இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும் என்பதைப் போல் இருக்கின்றது,

கொடூரன் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி அவலத்தைப் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருவாளர்கள் கமலஹாசன், கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கப்பன் இந்தியன் போன்றோர் வீட்டு அறிக்கைகள்.

ஈவு இரக்கமற்ற பிஞ்சு குழந்தைகளின் மேல் நடத்தப்பட்ட கொடூரமான குற்றத்தை மறைப்பதற்கு உதவிய அதிகாரிகள், அரசியல்வாதிகள் யார் என்று அதிகாரத்தில் உச்சத்தில் இருக்கும் இவர்களைப் போன்றவர்களுக்கு தெரியாதா? அவர்களின் பெயர்களை உச்சரிப்பதற்கு இவர்கள் ஏன் எச்சில் விழுங்கி கொண்டிருக்கிறார்கள்?

ஏதோ ஒரு மாநிலத்தில் பாதிப்பு ஏற்பட்டுதற்கு, இங்கு, நாலாம் படை திரட்டி மெழுகுவர்த்தியுடன் உருவம் சென்ற இப்போலி போராளிகள் (?), அடுத்த தெருவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பொங்காதது ஏன்?

அடுத்தவர்கள் ஆட்சியில் மதுபான கடைகளை எதிர்த்து அழுது ஆர்ப்பரிக்கும் இவர்கள், கடந்த ஆட்சியில் கள்ளச்சாராயத்திற்கு கூட மறந்தும் திருவாயை திறக்கவில்லை.

வீரமணிகளுக்கு CCTV வைத்து சாமரம் வீசும் சாந்திகளை விட கொடூரமானவர்கள், அரிதாரம் பூசாமல் நாடகமாடும் இவர்கள்தான் என கடும் காட்டமாக கூறியுள்ளார் ப.செந்தில்நாதன்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.