மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் விளம்பரம் போர்டுகள் வைத்து 4 வருடங்களுக்கு மேலாக சம்பாதித்த மீடியா டாட் காம் ஏஜென்சி,நகர பொறியாளர் சிவபாதம் அவர்களிடம் ரூ .15 லட்சம் கொடுத்து உள்ளேன் என கூறி மிரட்டல்
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பொது கழிப்பிடங்கள் உள்ள பகுதிகளில் சுவர்கள் கட்டி அதில் விளம்பரங்கள் ஒட்டப்பட்டு உள்ளது.
உதாரணமாக திருச்சி உழவர் சந்தை அருகில்,பாஜக மாவட்ட அலுவலகம் அருகில் ,சத்திரம் பேருந்து நிலையம் திருவெறும்பூர் என 20க்கும் மேற்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு மாநகராட்சிக்கு உரிய வாடகையை கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக எந்த பணமும் கட்டாமல் தனியாரிடம் விளம்பரங்களுக்கு பணம் பெற்று வந்துள்ளானர்.அதுவும் பத்திரிக்கையாளர்களை மதிக்காத ராயல் சென்டர் போன்ற நிறுவனங்கள் மூலம் …
இதனை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மாநகராட்சிக்கு பணம் கட்டாத விளம்பர போர்டுகளை அகற்றி உள்ளனர்.இதுக்கு முன்பு இருந்த அதிகாரி சிவபாதம் அவர்களிடம் ரூ 15 லட்ச ரூபாய் கொடுத்து இருக்கிறேன் அப்படி இருக்கும் போது எப்படி எனது விளம்பரங்களை அகற்றலாம் மீறி அகற்றினால், விளைவுகள் வேற மாதிரி இருக்கும் என இத்தனை ஆண்டுகளாக மாநகராட்சி பெயரைக் கூறி பணம் சம்பாதித்த மீடியா டாட் காம் என்ற விளம்பர ஏஜென்சி உரிமையாளர் மிரட்டி உள்ளார்.
முறையான அனுமதி இருந்தால் அதை காட்டுங்கள் சார் நாங்கள் அனுமதி பெற்ற எந்த விளம்பர போர்டுகளையும் அகற்றவில்லை ,மாநகராட்சிக்கு உரிய பணம் கட்டாத விளம்பர போர்டுகளை மட்டுமே அகற்றி வருகிறோம் என அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
இனியாவது மாநகராட்சிக்கு முறையாக விளம்பர போர்டுகள் முலம் வருமானம் வருமாறு அனுமதி வழங்குவார்களா ?

