Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் தவெக அமைச்சர் ரமேஷ் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டதை தொடர்ந்து நோயாளி ஒருவரும் வீடியோ எடுத்து மருத்துவ அலுவலர்களை மிரட்டல்.

0

'- Advertisement -

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றி கழக அமைச்சர் ரமேஷ் வீடியோ எடுத்து ரிலீஸ் வெளியிட்டதை தொடர்ந்து நோயாளி ஒருவரும் வீடியோ எடுத்து மருத்துவ அலுவலர்களை மிரட்டல்.

Ad banner

ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.

தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த ரமேஷ் அமைச்சர் பதவி ஏற்பதற்கு முன்பு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினராக ஆய்வு மேற்கொண்டு பணியில் கவன குறைவாக ,மற்றும் லஞ்சம் வாங்கிய பணியாளர்களை பணி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தார்.இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் தற்போது திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வீடியோ எடுத்து மருத்துவ அலுவலர்களிடம் தகராறு செய்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் கடந்த 3-ந் தேதி காலில் காயங்களுடன் ஒரு வாலிபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செவிலியர்கள் மருத்துவ முதலுதவி அளித்தனர். அப்போது அந்த வாலிபருக்கு உதவ மருத்துவ பணியாளர்கள் முன் வந்தனர் இதை அந்த வாலிபர் செல்போனில் வீடியோ எடுத்து செவிலியர்கள் மற்றும் மருத்துவரிடம் தகராறு செய்துள்ளார் இதை கண்டித்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் அந்த வாலிபர் மீது வழக்குப்பதிந்து அவர் யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.