Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரையில் கலெக்டர் கூறியும் வீடுகள் வழங்கப்படாததை கண்டித்து முற்றுகை போராட்டம்.

0

'- Advertisement -

திருச்சி பாலக்கரையில் கலெக்டர் கூறியும் வீடுகள் வழங்கப்படாததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் முற்றுகை போராட்டம்.

Ad banner

திருச்சி கல்மந்தை குடியிருப்பு 5 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி,பரிந்துரை செய்தும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடுகள் வழங்கப்படாமல் உள்ளது.பேச்சுவார்த்தை நடத்தி பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும் என உறுதிமொழி அளித்து 6 மாதகாலம் ஆகியும் இன்னும் வீடு வழங்கப்படவில்லை.இதை கண்டித்து இன்று பாலக்கரையில் இயங்கும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பயனாளிகளின் குடும்பத்தினரோடு போராட்டம் நடத்தினார்கள்.

இந்தப் போராட்டத்திற்கு மலைக்கோட்டை பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.கே.ராமர் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.