மாவட்ட செயலாளர் அருணை சந்தித்து தவெக வில் இணைந்த நிர்வாகியை ஆபாசமாக திட்டிய திருவெறும்பூர் எம்.எல் ஏ. நவல்பட்டு விஜி ஆடியோ வெளியாகி பரபரப்பு. (ஆடியோவை பெண்கள், குழந்தைகள் கேட்க வேண்டாம்)

தமிழக வெற்றிக்கழக நிர்வாகியை தரக்குறைவாக பேசிய திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி ஆடியோ வெளியாகி பரபரப்பு.
திருச்சி:திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (நவல்பட்டு விஜி), தமிழக வெற்றிக் கழகத்தின் (தா.வெ.க) நிர்வாகி ஒருவரை தொலைபேசியில் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பின்னணி என்ன?

பாதிக்கப்பட்ட தா.வெ.க நிர்வாகியான சபரி என்பவர், தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொள்ளுமாறு முன்னதாக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரை அணுகிக் கேட்டுள்ளார். எனினும், அதற்கு சட்டமன்ற உறுப்பினர் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சபரி தா.வெ.க-வின் மாவட்டச் செயலாளர் அருளை நேரில் சந்தித்து முறைப்படி கட்சியில் இணைந்துள்ளார். தனக்குத் தெரியாமல் மாவட்டச் செயலாளரைச் சந்தித்துக் கட்சியில் இணைந்ததால் அதிருப்தியடைந்த சட்டமன்ற உறுப்பினர், சபரியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிகத் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாகத் தெரிகிறது. இந்த உரையாடல் தற்போது ஆடியோவாக கசிந்து பொதுவெளியில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி, தனது அரசியல் கட்சி நிர்வாகியிடம் இவ்வாறு கண்ணியம் குறைவாக நடந்துகொண்டது பொதுமக்கள் இடையே பெரும் அதிருப்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “தா.வெ.க சட்டமன்ற உறுப்பினரின் உண்மை முகம் இதுதான் என்பதைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்” எனப் பாதிக்கப் பட்ட தரப்பினரும், சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

