Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மயங்கி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபம் பலி.

0

'- Advertisement -

Ad banner

உறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மயங்கி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபம் பலி.

TVK ad

யார் அவர்? உறையூர் போலீசார் விசாரணை.

திருச்சி உறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கடந்த 12ந்தேதி கிடந்து உள்ளார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த முதியவருக்கு சுமார் 70 வயது இருக்கும்.அவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் இந்த சம்பவம் குறித்து கே சாத்தனூர் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பெயரில் உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார் ? என்பது குறித்து தீவிர விசாரணை நமேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.